திரை வாழ்வில் 18 ஆண்டுகள் நிறைவு... நெகிழ்ச்சியில் நடிகை தமன்னா !

tamanna bhatia

 திரை வாழ்வில் 18 ஆண்டுகள் நிறைவுபெற்றதை நடிகை தமன்னா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். 

தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருப்பவர் தமன்னா. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். மில்க் ப்யூட்டி என்று அழைக்கப்படும் தமன்னாவிற்கு சினிமா உலகில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 

tamanna bhatia

இந்நிலையில் சினிமாவில் 18 ஆண்டுகளை நடிகை தமன்னா நிறைவு செய்துள்ளது. இது குறித்து நெகிழ்ச்சி பதிவு ஒன்றை நடிகை தமன்னா பதிவிட்டுள்ளார். அதில் சினிமாவில் 18 ஆண்டுகள் நிலைத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இத்தனை ஆண்டுகளில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளேன். என் மீது ரசிகர்கள் நிறைய அன்பு செலுத்துகிறார்கள். 

tamanna bhatia

சினிமாவில் நான் ஒவ்வொரு நாளும் ஒரு விஷயத்தை கற்றுக் கொள்கிறேன். எனது சினிமாவில் இத்தனை ஆண்டுகள் உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி. நடிகை தமன்னாவின் நெகிழ்ச்சி பதிவை பார்த்த ரசிகர்கள், அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

 

 

Share this story