ஒரே நேரத்தில் இரு சூப்பர் ஸ்டார்களுடன் நடித்துள்ளேன் - தமன்னா மகிழ்ச்சி !

tamanna bhatia

ஒரே நேரத்தில் இரு சூப்பர் ஸ்டார்களுடன் நடித்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார். 

தென்னிந்தியாவில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருபவர் நடிகை தமன்னா. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்‘ படத்தில் நடித்துள்ளார். அதில் இடம்பெற்றுள்ள ‘காவாலா’ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. 

tamanna bhatia

அதேபோன்று தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள ‘போலா சங்கர்’ படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்த நாளில் திரையங்கில் வெளியாகவுள்ளது. ஒரே நேரத்தில் இரு சூப்பர் ஸ்டார்களுடன் நடித்தது குறித்து நடிகை தமன்னா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

இது குறித்து பேசியுள்ள அவர், ரஜினிகாந்த், சிரஞ்சீவி ஆகிய இருவரும் பெரிய நடிகர்கள். அவர்களுடன் இணைந்து நடித்தது என் கனவை நனவாக்கியுள்ளது. அதுவும் ஒரே நேரத்தில் இரு படங்களும் வெளியாவது மகிழ்ச்சியளிக்கிறது. ‘ஜெயிலர்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளேன். நான் ஆடியே காவாலா பாடல் இவ்வளவு பெரிய ஹிட்டடித்துள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறியுள்ளார். 

 

Share this story