காதலரை கரம்பிடிக்கும் தமன்னா... விரைவில் வெளியாகும் திருமண அறிவிப்பு !

tammanna

தனது காதலன் விஜய் வர்மாவை விரைவில் நடிகை தமன்னா திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சினிமா உலகில் மிகவும் பிரபலமான நடிகையாக இருப்பவர் தமன்னா. தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார். தற்போது தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் அவரின் அசத்தலான நடனத்தில் வெளியான காவாலா பாடல் செம்ம ஹிட்டடித்துள்ளது. 

tammanna

இதற்கிடையே பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை நீண்ட நாட்களாக தமன்னா காதலித்து வருகிறார். இருவரும் அடிக்கடி ஒன்றாக பொதுவெளியில் வரும் புகைப்படங்களும் இதை உறுதிப்படுத்தியது. இதையடுத்து விஜய் வர்மாவுடனான காதலை தமன்னா சமீபத்தில் உறுதிப்படுத்தினார். அதேநேரம் ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ வெப் தொடரிலும் இணைந்து நடித்துள்ளனர். 

 இந்நிலையில் சமீபத்தில் பேசிய தமன்னா காதலர் விஜய் வர்மா, எங்கள் காதல் குறித்து எனது அம்மாவிற்கு தெரிந்தவுடன் எப்போது திருமணம் என்று கேட்டு வருகிறார். நான் மார்வாடி சமூகத்தை சேர்ந்தவன் என்பதால் ஒரு ஆணுக்கு 16 வயது ஆனதும் திருமண பேச்சை ஆரம்பித்து விடுவார்கள். எனது திருமணம் குறித்த பேச்சு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. நான் நடிகராகிவிட்டதால் கொஞ்ச நாள் இந்த பேச்சை எங்கள் வீட்டில் ஆரம்பிக்கவில்லை. ஆனால் இப்போது விஷயம் தெரிந்தவுடன் ஒவ்வொரு முறையும் அம்மா போன் செய்யும் போதும் திருமண்ம் குறித்து கேட்டுக் கொண்டே இருக்கின்றனர். நானும் அதற்கு பதில் அளிக்காமல் இருந்து வருகிறேன் என்று கூறியுள்ளார். இதை வைத்து பார்க்கும் போது விஜய் வர்மா - தமன்னா திருமண அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


 

Share this story