விஜய்யின் படத்தில் நடித்தது மிகப்பெரிய தவறு - ஓபனாக பேசிய தமன்னா !

tamanna bhatia

விஜயின் 'சுறா' படத்தில் நடித்தது மிகப்பெரிய தவறு என நடிகை தமன்னா தெரிவித்துள்ளார். 

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழியில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த 2010-ஆம் ஆண்டு எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில் நடிகை தமன்னா நடித்திருந்தார். விஜய்யின் 50வது படமாக உருவான அந்த படம் படுதோல்வியை சந்தித்தது. 

tamanna bhatia

விஜயின் 'சுறா' படத்தில் நடித்தது நான் செய்த மிகப்பெரிய தவறு. அந்தப் படம் நிச்சயம் தோல்வியை தரும் என எனக்கு தோன்றியது. ஆனால் வேறு வழி இல்லாமல் அந்த படத்தில் நடித்தேன். ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகிவிட்டால் அதை முடித்து கொடுக்க வேண்டியது ஒரு நடிகையின் கடமை.

நான் நடிக்கும் ஒரு படத்தில் சில விஷயங்கள் சரியில்லை என்றால் அதை தைரியமாக நான் சொல்வேன். ஆனால் சுறா படத்தில் நடித்த போது எதையும் என்னால் வெளிப்படையாக பேச முடியவில்லை. அதனால்தான் அந்தப் படத்தில் நடித்துவிட்டு வந்துவிட்டேன். பல படங்களில் நடிக்கிறோம். அதனால் சில விஷயங்களை பார்த்தாலே அது சரிவராது என்று தெரிந்துவிடும். இனி அது போன்ற படங்களில் நடித்து உங்களை தொந்தரவு செய்ய மாட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார். தமன்னாவின் இந்த பேட்டி விஜய் ரசிகர்களிடையே எரிச்சலை கிளப்பியுள்ளது. 

Share this story