பிறந்தநாள் கொண்டாடும் நடிகை தமன்னா.. ரசிகர்கள் வாழ்த்து...

பிறந்தநாள் கொண்டாடும் நடிகை தமன்னா.. ரசிகர்கள் வாழ்த்து...

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் பிஸியாக இருக்கும் நடிகை தமன்னா. தமிழில் அயன், தர்மதுரை, சுறா, சிறுத்தை, வீரம் போன்ற ‌சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தமிழகத்தில் தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ள நடிகை தமன்னா, தொடர்ந்து தெலுங்கில் நடித்து வருகிறார். சில வருடங்களால் தமிழில் நடிக்காமல் இருந்து வந்த அவர், நீண்ட இடைவெளிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘ஜெயிலர்’ கதாநாயகியாக நடித்துள்ளார். இதற்கிடையே பிரபல நடிகர் விஜய் வர்மாவை, நடிகை தமன்னா காதலித்து வருகிறார். சமீபத்தில் தான் தனது காதலை அவர் உறுதி செய்தார். இதற்கிடையே தனது காதலன் விஜய் வர்மாவுடன் இணைந்து நடித்துள்ள ‘லஸ்ட் ஸ்டோரிஸ்’ படத்தின் காட்சி இணையத்தில் வெளியானது. இந்த காட்சியில் உச்சக்கட்ட ஆபாசத்துடன் இருவரும் இருந்தனர். இது நெட்டிசன்களின் கடும் கண்டனத்திற்கு ஆளாகியது. 

பிறந்தநாள் கொண்டாடும் நடிகை தமன்னா.. ரசிகர்கள் வாழ்த்து...

இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை தமன்னாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

Share this story