என்னங்க சொல்றீங்க... அது வைரமே இல்லையா.. ஷாக் கொடுத்த நடிகை தமன்னா

tamannaah

தனது கையில் அணிந்திருந்த வைர மோதிரம் குறித்து நடிகை தமன்னா விளக்கமளித்துள்ளார். 

தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருப்பவர் நடிகை தமன்னா. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார். விரைவில் வெளியாகவுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்திலும் நடித்துள்ளார். சமீபத்தில் அப்படத்திலிருந்து தமன்னாவின் அசத்தலான நடனத்தில் வெளியான ‘காவாலா’ நல்ல வரவேற்பை பெற்றது. 

tamannaah

தற்போது பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வரும் அவர், ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’, ஜீ கர்தா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சில படங்களில் பிசியாக நடித்தும் வருகிறார். இதுதவிர பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை தீவிரமாக காதலித்து வரும் தமன்னா விரைவில் அவரை திருமணமும் செய்யவுள்ளார். 

tamannaah

இந்நிலையில் நடிகை தமன்னா வைர மோதிரம் அணிந்திருந்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது. அது உலகின் 5வது மிகப்பெரிய வைரம் என்றும், அந்த வைரத்தை நடிகர் ராம் சரணின் மனைவி உபாசனா கொனிடலா தமனனாவிற்கு பரிசாக அளித்தார் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த சர்ச்சைக்கு தற்போது தமன்னா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இது குறித்து விளக்கமளித்துள்ள அவர், அது வைரமே இல்லை என்றும், பாட்டில் ஓபனரை வைத்து போட்டோ எடுத்துக்கொண்டேன் என்றும் கூறினார். இதனால் வைர சர்ச்சைக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

Share this story