ஸ்டைலிஷ் லுக்கில் தமன்னா... வைரல் புகைப்படங்கள் !

Tamannaah

ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை நடிகை தமன்னா வெளியிட்டுள்ளார். 

Tamannaah

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் பிஸியாக இருக்கும் நடிகை தமன்னா. தமிழில் அயன், தர்மதுரை, சுறா, சிறுத்தை, வீரம் போன்ற ‌சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தமிழகத்தில் தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ள நடிகை தமன்னா, தொடர்ந்து தெலுங்கில் நடித்து வருகிறார். 

Tamannaah

சில வருடங்களால் தமிழில் நடிக்காமல் இருந்து வந்த அவர், நீண்ட இடைவெளிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் அவர் ஆடிய ‘காவாலா’ பாடலின் நடனம் ரசிகர்களின் கவனம் ஈர்த்தது. இதற்கிடையே பிரபல நடிகர் விஜய் வர்மாவை, நடிகை தமன்னா காதலித்து வருகிறார். சமீபத்தில் தான் தனது காதலை அவர் உறுதி செய்தார். 

Tamannaah

இந்நிலையில்  ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கும் போட்டோஷூட்டை நடிகை தமன்னா வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. 

Share this story