தமன்னா வெளியிட்ட ‘ஜெயிலர்’ அப்டேட்.. வைரலாகும் இன்ஸ்டா வீடியோ !

tamanna bhatia

‘ஜெயிலர்’ படத்தில் நடிகர் தமன்னா இருக்கும் வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’. ஜெயில் கதைக்களம் கொண்ட இப்படத்தில் ஓய்வுபெற்ற ஜெயிலராக ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்து வருகிறார். 

jailer

இந்த படத்தில் ஜாக்கி ஷெராப், மோகன்லால், சுனில், தமன்னா, சிவ ராஜ்மோகன், யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த பட்த்திற்கு அனிரூத் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

jailer

ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, கடலூர், ஐதராபாத், நேபாளம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுள்ளது. இதையடுத்து தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மங்களூரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பில் தமன்னா இருக்கும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் இயக்குனர் நெல்சன் உள்ளிட்ட படக்குழுவினர் உள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 


 

Share this story