காதலன் விஜய் வர்மாவை பிரிந்தாரா நடிகை தமன்னா...?

tammy

நடிகை தமன்னா, காதலன் விஜய் வர்மாவை பிரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் சில வருடங்கள் முன்பு வரை முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் தமன்னா. 'ஜெயிலர்' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியும் ஆச்சரியப்படுத்தினார். அதன் பின் தமிழில் கடந்த வருடம் அவர் நடித்து வெளிவந்த 'அரண்மனை 4' படம் 100 கோடி வசூல் சாதனை படைத்தது. தற்போது 'ஒடேலா 2' என்ற படத்தில் தமன்னா நடித்து வருகிறார்.tammy

தமன்னாவும், நடிகர் விஜய் வர்மாவும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்தார்கள். இருவரம் நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொள்வது வழக்கம். இந்நிலையில் இருவரும் பிரிந்துவிட்டதாகத் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

tammy

இருவரும் நண்பர்களாக மட்டுமே தொடரலாம் என முடிவு செய்துள்ளார்களாம்.  இருவரும் திருமணம் செய்துகொள்ள இருந்த நிலையில் இந்த திடீர் பிரிவுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பி ஏதும் வெளியாகவில்லை. 

 

Share this story