தினம் ஒரு போட்டோ.. புடவையில் அசத்தும் தன்யா ரவிச்சந்திரன்

நடிகை தன்யாவின் புடவை லுக் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
தமிழில் ‘பலே வெல்லயத்தேவா’, ‘பிருந்தாவனம் ‘ போன்ற படங்களில் நடித்தவர் தன்யா ரவிச்சந்திரன். இவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த கருப்பன் திரைப்படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. இதையடுத்து நடிகர் சிபி ராஜுடன் மாயோன் படத்தில் இவர் நடித்துள்ளார். அப்படம் இன்னும் வெளிவரவில்லை.
தற்போது தன்யா சுந்தரபாண்டியன் இயக்குனர் பிரபாகரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். பெண் மையக் கதாபாத்திரம் கொண்ட படமாக அப்படம் உருவாகி வருகிறது. இதையடுத்து சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.
இந்நிலையில் புடவையில் அசத்தல் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை தன்யா ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.