டாப் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் டாப்ஸி... சிக்ஸ்பேக் புகைப்படங்கள் வைரல் !

tapsee

நடிகை டாப்ஸி சிக்ஸ்பேக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

 தென்னிந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் நடித்து வருபவர் நடிகை டாப்ஸி. தமிழில் தனுஷ் நடித்து வெற்றிப்பெற்ற ஆடுகளம் படத்தின் மூலம்‌ அறிமுகமானார். அதன்பிறகு ஆரம்பம், காஞ்சனா–2, கேம் ஓவர் உள்ளிட்ட சில படங்களில் தமிழில் நடித்துள்ளார். பின்னர் தமிழில் பெரிதாக வாய்ப்புகள் இல்லை. 

tapsee

தற்போது பாலிவுட் படங்களில் கவனம் செலுத்துகிறார். தொடர்ந்து பிங்க், பத்லா, நாம் சபானா, மி‌ஷன் மங்கள் போன்ற பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். இந்த படங்களில் ‌டாப்ஸியின் நடிப்பு ரசிகர்களிடையே நல்ல அங்கீகாரத்தை ‌பெற்று தந்துள்ளது. இதையடுத்து அனுராக் காஷ்யப்பின் இயக்கத்தில் ‘டூ-பாரா’, ‘லூப் லாபெட்டா’, மற்றும் ‘சபாஷ் மித்து’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

tapsee

இந்நிலையில் தனது உடலை கட்டுக்கோப்பாக வைப்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார் டாப்ஸி. அந்த வகையில் எப்போதும் தீவிரமாக உடற்பயிற்சி செய்து வருகிறார். தற்போது தீவிர உடற்பயிற்சியில் இருக்கும் டாப்ஸி, சிக்ஸ்பேக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். வழக்கமாக ஹீரோக்கள் மட்டுமே இதுபோன்ற புகைப்படங்களை வெளியிடுவர். ஆனால் வழக்கத்திற்கு மாறாக நடிகை டாப்ஸி வெளியிட்டுள்ள பிட்னஸ் புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

Share this story