குந்தவைக்கு சுயவரம் எப்போது ?... நடிகை திரிஷா அளித்த சுவாரஸ்ய பதில் !

trisha

நடிகை திரிஷாவிற்கு திருமணம் எப்போது என்ற கேள்விக்கு சுவாரஸ்யமான பதில் அளித்துள்ளார். 

பொன்னியின் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நேற்று கோவையில் நடைபெற்றது. இதில் நடிகை திரிஷா, விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். அப்போது இந்த நிகழ்ச்சியில் பேச வந்த  திரிஷாவை பார்த்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். கோவைக்கு பல ஆண்டுகள் கழித்து வருகிறேன். கோவையை மூன்று‌ விஷயங்களுக்கு எனக்கு பிடிக்கும். 

trisha

அதில் கோவை மக்கள், அவர்கள் பேசும் தமிழ் மற்றும் உணவு ஆகியவை கோவைக்கு வர காரணம். கோவையில் எப்போதும் அமைதி இருக்கிறது. அது எப்படி என்று என தெரியவில்லை. கோவையில் ஒரு பாசிட்டிவ் வைபிரேஷன் இருக்கும். இப்படி அழகாக பேசிக்கொண்டிருந்த திரிஷாவிடம் 'லியோ' குறித்து அப்டேட் கேட்டு ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். 

trisha

அதற்கு பதிலளித்த அவர் 'லியோ' படப்பிடிப்பில் இருந்துதான் வருகிறேன். லோகேஷ் கனகராஜூம், உங்களோட தளபதி விஜய்யும் நல்லா இருங்காங்க. மற்ற விஷயங்கள 'லியோ' நிகழ்ச்சியில் பேசலாம் என்று கூறினார். அதன்பிறகு குந்தவைக்கு எப்போது சுயவரம் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரசிகர்கள் என்ன நினைக்கிறார்களோ அதுதான் என்று கூறினார். 

Share this story