‘விஜய்’யின் ‘லியோ’ படத்திலிருந்து விலகினாரா திரிஷா? – தீயாக பரவும் தகவல் உண்மை என்ன!....

photo

விஜய், லோகஷ் கனகராஜ்ஜுடன் கூட்டணி அமைத்து தனது 67வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ‘லியோ’ என பெயரிட்டுள்ளனர். படத்தில் விஜய்க்கு ஜோடியா நடிகை திரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் ,  அர்ஜூன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், மன்சூர் அலி கான், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.

photo

படத்தின் பூஜை வீடியோ, டைட்டில் புரொமோ, நடிகர்கள் அறிவிப்பு என அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய நிலையில், படப்பிடிப்பிற்காக படக்குழுவினருடன் காஷ்மீர் சென்ற நடிகை திரிஷா மட்டும் மூன்றே நாட்களில் திரும்பி வந்துள்ளார்.  இதனை அறிந்த ரசிகர்கள், ஒரு வேள திரிஷாவை கொன்னுட்டாங்களோ…..என மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

photo

இந்நிலையில், நடிகை திரிஷா சென்னை திரும்பிய வேகத்தில், தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்த லியோ படம் குறித்து இவர் ரீட்வீட் செய்திருந்த  ட்வீட்களை டெலிட் செய்துள்ளார். இதனால், திரிஷா லியோ படத்தில் இருந்து விலகியதாகவும், அவருக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதால் தான் படப்பிடிப்பிலிருந்து பாதியில் வந்ததாகவும் தகவல் பரப்பி வருகின்றனர்.

photo

ஆனால் திரிஷாவின் ஆதரவாளர்கள் சிலர், திரிஷா தான் ரீ-ட்வீட் செய்வதை ஒரு சில நாட்களில் டெலீட் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். அப்படித்தான் லியோ படம் குறித்து சில பதிவுகளை நீக்கியதாக கூறுகின்றனர். இதனால்   திரிஷா லியோ படத்தில் இருந்து விலகியதாக பரவி வரும் செய்தி வெறும் வதந்திதான் என்று கூறப்படுகிறது. மேலும் தளபதி விஜய்யுடன் திரிஷா நடிக்கும் ஐந்தாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share this story