‘தளபதி 67’ - ல் இணைந்த நடிகை திரிஷா.. மீண்டும் இணைந்த ‘கில்லி’ கூட்டணி !
விஜய் நடிக்கும் ‘தளபதி 67’ படத்தில் நடிகை திரிஷா இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘மாஸ்டர்’ படத்திற்கு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் லலித்குமார் தயாரிக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு இன்று காஷ்மீரில் தொடங்கியுள்ளது. இந்த படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர்.
அதை பூர்த்தி செய்யும் விதமாக இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், இயக்குனர் மிஷ்கின், அர்ஜூன், கெளதம் மேனன், நடன இயக்குனர் சாண்டி, நடிகை பிரியாஆனந்த், மலையாள இளம் நடிகர் மேத்யூ தாமஸ், ஆகியோர் இணைந்துள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இப்படத்தில் நடிகை திரிஷா இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய்யுடன் இணைந்து திரிஷா நடிக்கவுள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்த இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.