‘லியோ’-விற்கு பிறகு திரிஷாவிற்கு குவியும் வாய்ப்புகள்... புதிய படத்தின் இயக்குனர் யார் தெரியுமா ?
‘லியோ’ படத்திற்கு பிறகு நடிகை திரிஷாவிற்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை திரிஷா. சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் ஹீரோயினாக வலம் வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடித்து வந்தார். இந்த படங்கள் போதிய வரவேற்பை பெறவில்லை.
இதையடுத்து குந்தவையாக ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்து மீண்டும் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்துள்ளார். இதைத்தொடர்ந்து தற்போது ‘லியோ‘ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்து வருகிறார். ‘லியோ’ படத்திற்கு பிறகு தற்போது மீண்டும் வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
அந்த வகையில் ‘தூங்காநகரம்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த கவுரவ் நாராயணன் இயக்கத்தில் புதிய படத்தில் திரிஷா நடிக்கவுள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படமாக தயாராகும் இந்த படம் க்ரைம் த்ரில்லரில் உருவாகிறது. திரிஷாவின் 68வது படமாக உருவாகும் இந்த படத்தை வேல்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் பெரிய பட்ஜெட்டில் இந்த படம் உருவாகிறது. ‘கொலை வழக்கு’ என்ற தலைப்பில் உருவாகும் இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. தற்போது இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை இறுதியில் தொடங்கவுள்ளது.