அஜித்திற்கு ஜோடியாகும் குந்தவை... ‘ஏகே 62’ ஹீரோயின் குறித்து முக்கிய அப்டேட்

ak 62

 அஜித்தின் ‘ஏகே 62’ படத்தின் ஹீரோயின் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘துணிவு’. படப்பிடிப்பு நிறைவுபெற்ற இப்படத்தின் தயாரிப்பு பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொங்கலுக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விரைவில் துவங்கவுள்ளது. 

ak 62

இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார். லைக்கா தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். பிரபல இயக்குனராக கௌதம் மேனன் இப்படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு பிறகு துவங்கவுள்ளது. 

ak 62

இந்நிலையில் இப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இது குறித்து தகவல் வெளியான நிலையில் தற்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளது. கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் ஆகிய படங்களுக்கு பிறகு 4வது முறையாக அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கவுள்ளார். சமீபத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பை திரிஷா வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Share this story