ரசிகர்களுக்கு நன்றி கூறி வீடியோ வெளியிட்ட நடிகை த்ரிஷா

ரசிகர்களுக்கு நன்றி கூறி வீடியோ வெளியிட்ட நடிகை த்ரிஷா

அமீர் இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2002ஆம் ஆண்டு வெளியான படம் மௌனம் பேசியதே. அபராஜித் ஃபிலிம்ஸ் தயாரித்திருந்த இப்படத்தில் நந்தா, லைலா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த நிலையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தது. தமிழில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் பின்பு தெலுங்கில் ரீமேக்கானது. இப்படம் மூலம் அமீர் இயக்குநராக அறிமுகமானதும் த்ரிஷா கதாநாயகியாக உருவானதும் நினைவுகூரத்தக்கது. இந்த நிலையில் இப்படம் வெளியாகி இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது. 


இதையொட்டி, கதாநாயகியாக நடித்த ‘மௌனம் பேசியதே’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவானதை கொண்டாடும் த்ரிஷா, நடிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். 
 

Share this story