ப்பபா.. வியக்கும் வைக்கும் அழகில் நடிகை திரிஷா... புடவையில் இருக்கும் புகைப்படங்கள் வைரல் !

trisha

 வியக்கும் வைக்கும் அழகில் இருக்கும் நடிகை திரிஷா புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 

trisha

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை திரிஷா. துணை நடிகையாக அறிமுகமான அவர், சூர்யாவின் ‘மெளனம் பேசியதே’ படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கினார். அதன்பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். 

trisha

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக ஒரு நடிகையாக சினிமாவில் கோலோச்சி வருகிறார். சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அந்த படங்கள் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெறவில்லை. அதனால் சினிமாவில் இருந்து விலகிவிடுவார் என்று கருத்துக்கள் நிலவி வந்த நிலையில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் மூலம் தன்னை மீண்டும் நிலை நிறுத்தியுள்ளார். 

trisha

அதேபோன்று யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் ‘தளபதி 67’ படத்தில் இணைந்துள்ளதாக நேற்று அறிவிப்பு வெளியானது. நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய்யுடன் திரிஷா நடிக்கவுள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி இப்படத்தின் படப்பூஜை வீடியோ ஒன்று வெளியானது. அதில் வியக்கும் லுக்கில் நடிகை திரிஷா புடவையில் இருந்தது ரசிகர்கள் கவர்ந்துள்ளது. இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.    

 

Share this story