"தக் லைஃப் படம் பாத்தா இன்னும் ஷாக் ஆவீங்க" - தக் லைஃப் குறித்து நடிகை திரிஷா கருத்து !

trisha
தக் லைஃப் திரைப்படத்தின் டீசரை பார்த்துவிட்டு ரசிகர்கள் தன்னை துரோகி எனக் கூறுவதாக நடிகை திரிஷா தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், திரிஷா, அபிராமி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள தக் லைஃப் திரைப்படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அதில், கமல்ஹாசன், திரிஷா ஆகியோர் ஜோடியாக இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றன. விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்குப் பிறகு சிம்புவும், திரிஷாவும் ஒரே படத்தில் நடிப்பதால் அவர்கள் ஜோடியாக நடித்திருப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டீசரை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.  

 
இந்த டிரெய்லரை பார்த்துவிட்டு ரசிகர்கள் தன்னை துரோகிகள் எனக் கூறுவதாக நடிகை திரிஷா நகைச்சுவையாக தெரிவித்திருக்கிறார். புரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய நடிகை திரிஷா, "டிரெய்லர் பார்த்து எல்லோரும் ஷாக் ஆனதாக கூறுகிறார்கள். ஆனால், அவர்கள் படம் பார்த்தால் இன்னும் ஷாக் ஆவார்கள்" என்றும் திரிஷா கூறியிருக்கிறார்.
 
மேலும், "இரண்டு மணிநேர திரைப்படத்தின் 2 நிமிட காட்சிகள் தான் டிரெய்லர். அதை தான் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். அதை பார்த்துவிட்டு நீங்கள் கமலுக்கு ஜோடியா அல்லது சிம்புவுக்கு ஜோடியா என்றெல்லாம் கேட்கிறார்கள். படத்தை பற்றி நிறைய பேச வேண்டி இருக்கிறது. வெளியான பிறகு பேசுகிறேன்" என்றும் திரிஷா கூறியுள்ளார். தக் லைஃப் திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள நிலையில், வரும் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Share this story