ஓகே சொன்ன திரிஷா.. திருமணம் ஏற்பாடுகள் தீவிரம்
திருமணம் செய்துக்கொள்ள நடிகை திரிஷா சம்மதம் தெரிவித்திருப்பதால் குடும்பத்தினர் உற்சாகமாக ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
90’ஸ் கிட்ஸ்கிற்கு மிகவும் பிடித்தமான நடிகை என்றால் அது திரிஷா தான். தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் 15 வருடத்திற்கு மேல் டாப் நாயகியாக வலம் வரும் இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். பட வாய்ப்பு இல்லாமல் தவித்துக் கொண்டு இருந்த இவருக்கு 96 திரைப்படம் அவரது சினிமா கெரியரில் புதிய திருப்புமுனையைத் தந்தது. அந்த படத்தில் ஜானு கதாபாத்திரம் இவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

கடந்த 2002ம் ஆண்டு வெளியான ”மௌனம் பேசியதே” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் திரிஷா. அப்போது தனது திரையுலக பயணத்தை தொடங்கி இன்று வரை திரிஷா முன்னணி நடிகையாக இருக்கிறார் என்றால் மிகையாகாது. சமீபகாலமாக ஹீரோயின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்தில் மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கடைசியா அவர் நடிப்பில் வெளியான திரைப்படம் பரமபத விளையாட்டு. அதன்பிறகு கர்ஜனை, சதுரங்கவேட்டை 2, ராங்கி, சர்க்கரை உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார்.

தற்போது ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்து வரும் திரிஷா, புதிய படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார். 37 வயது நிரம்பிய திரிஷா, நீண்ட நாட்களாக திருமணம் செய்யவுள்ளதாக வதந்திகள் பரவி வந்தது. ஆனால் அதையெல்லாம் நடிகை திரிஷா, மறுத்து வந்தார். இந்நிலையில் நடிகை திரிஷா, திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஏற்பாடுகளை தீவிரமாக குடும்பத்தினர் செய்து வருவதாக கூறப்படுகிறது.

