இளசுகளை சொக்க வைக்கும் அழகில் வாணி போஜன்.. புகைப்படங்கள் இதோ...

vani bhojan

 நடிகை வாணி போஜன் வெளியிட்டுள்ள அழகிய புகைப்படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 

vani bhojan

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் வாணி போஜன். சின்னத்திரை மூலம் தனது வாழ்க்கை தொடங்கிய வாணி போஜன், தற்போது சினிமாவில் பிசி நடிகையாக மாறிவிட்டார்.  சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்கப்பட்ட வாணி போஜன், சன் டிவியில் ஒளிபரப்பான ‘தெய்வ திருமகள்’ சீரியல் மூலம்தான் மிகவும் பிரபலமானார். 

vani bhojan

இதைத்தொடர்ந்து வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்த வாணி போஜன், அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ‘ஓ மை கடவுளே’  படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு ‘லாக்கப்’, பாயும் ஒளி நீ எனக்கு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதேபோன்று விக்ரமின் ‘மகான்’ படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தற்போது நடிகர் பரத்துக்கு ஜோடியாக புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். 

vani bhojan

சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் வாணி போஜன், படவாய்ப்புகளை பெற தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் அழகிய லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வாணி போஜன் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

Share this story