கோடை வெயில்ல குளு குளு... வாணிபோஜனின் லேட்டஸ்ட் க்ளிக் !
நடிகை வாணி போஜனின் லேட்டஸ்ட் லுக் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகைகளில் ஒருவர் நடிகை வாணிபோஜன். முன்னணி நடிகைகளுடன் போட்டிப்போடும் அளவிற்கு தமிழ் சினிமாவில் வளர்ந்து வருகிறார். பெரிய ஹீரோக்களின் திரைப்படங்களில் வாணிபோஜன் நடித்து வருவது திரையுலகில் வியப்பை ஏற்படுத்தி வருகிறது.
‘ஓ மை கடவுளே’ படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்த அவர், ‘லாக்கப்’, பாயும் ஒளி நீ எனக்கு’, தமிழ் ராக்கர்ஸ்' உள்ளிட்ட பல படங்களில் அடுத்தடுத்து நடித்தார். சமீபத்தில் கலையரசன் நடிப்பில் வெளியான 'செங்களம்' வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரவேற்பை பெற்றார்.
ஆரம்பத்தில் கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்த வாணிபோஜன், தற்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அசரடித்து வருகிறார். இந்நிலையில் வெயிலுக்கு இதமாக மாலத்தீவில் ஜாலியாக இருக்கும் புகைப்படங்களை வாணி போஜன் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வரவேற்பை பெற்றுள்ளது.