ராதிகாவுடன் பிறந்தநாளை கொண்டாடிய பிரபல நடிகை... வைரலாகும் புகைப்படங்கள் !

varalakshmi sarathkumar birthday

நடிகை வரலட்சுமி சரத்குமார், தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 

varalakshmi sarathkumar birthday

தன்னுடைய மிரட்டும் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருபவர் நடிகை வரலட்சுமி. நடிகர் சரத்குமாரின் மகளான இவர், தமிழ், தெலுங்கு என தென்னிந்தியாவின் பல மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானாலும் போல்டான கதாபாத்திரம்தான் இவருக்கு ரசிகர்களிடையே நல்ல அங்கீகாரத்தை கொடுக்கிறது. 

varalakshmi sarathkumar birthday

சிம்புவின் ‘போடா போடி’ படத்தின் கதாநாயகியாக அறிமுகமான இவர், தாரை தப்பட்டை, மாரி 2 , சர்க்கார், விக்ரம் வேதா, சண்டக்கோழி 2 உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் வித்தியாசமான நடிப்பை வெளியுள்ளார். அதனால் ரசிகர்கள் விரும்பும் நடிகையாக சினிமா உலகில் வரலட்சுமி வலம் வருகிறார். 

varalakshmi sarathkumar birthday

இந்நிலையில் 37 வயதாகும் நடிகை வரலட்சுமி, தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி தனது நண்பர்களுடன் இணைந்து நேற்றிரவு பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினார். இந்த பிறந்தநாள் விழாவில் நடிகை ராதிகாவும் கலந்துக்கொண்டுள்ளார். பிறந்தநாள் கொண்டாடும் நடிகை வரலட்சுமிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

varalakshmi sarathkumar birthday

 

 

Share this story