நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு டும்..டும்..டும்...கோலாகலமாக நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்!

tn

நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமிக்கும், மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிகோலாய் சச்தேவுக்கும் நேற்று நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. 

நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து அவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக சசிகுமார் நடிப்பில் வெளியான தாரை தப்பட்டை, காட்டேரி, நடிகர் விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடிகை வரலட்சுமி நடித்துள்ளார். 

tn

இந்த நிலையில், நடிகை வரலட்சுமிக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடிகை வரலட்சுமிக்கும், மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிகோலாய் சச்தேவுக்கும் நேற்று நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. மும்பையில் நடைபெற்ற இந்த நிச்சயதார்த்த விழாவில் சரத்குமார் மற்றும் ராதிகா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகோலாய் சச்தேவ் ஆர்ட் கேலரி ஒன்றை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Share this story