தமிழை விட மற்ற மொழிகளில் நல்ல வரவேற்பு - நடிகை வரலட்சுமி சரத்குமார் !

varalakshmi

தமிழை தவிர மற்ற மொழிகளில் தனக்கு நல்ல வரவேற்பு கிடைப்பதாக நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார். 

தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான 'போடா போடி' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் வரலட்சுமி. அதன்பிறகு தனது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். குறிப்பாக வில்லியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். 

varalakshmi

தற்போது தமிழை தவிர தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். மற்ற மொழிகளில் வாய்ப்பு குவிவதால் அங்கேயே கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் கன்னடத்தில் உருவாகி சூப்பர் ஹிட்டடித்த 'கொன்றால் பாவம்' படத்தின் தமிழ் ரீமேக்கில் தற்போது நடித்து வருகிறார். விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு வரலட்சுமி பேசினார். 

அதில் தெலுங்கில் அதிகப்படியான திரைப்படங்களில் நடித்து வருகிறேன். தமிழை விட தெலுங்கில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. ஒரே வருடத்தில் தெலுங்கில் கிடைத்த வரவேற்பு  தமிழில் கிடைக்கவில்லை. அங்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. சம்பள விஷயத்தில் பேரம் பேசுவதில்லை. திறமைக்கான மரியாதை கிடைக்கிறது‌. படத்தில் நான் இருந்தால் வரவேற்பு இருக்கும் என நம்புகிறார்கள் என்று கூறினார்.   ‌

Share this story