என்னை அட்ஜஸ்ட் பண்ண சொன்னாங்க - பகீர் கிளப்பிய பிரபல நடிகை !

varalakshmi sarathkumar

பிரபல நடிகையான வரலட்சுமி சரத்குமார் கூறிய விஷயம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை வரலட்சுமி சரத்குமார், வில்லி மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். தமிழை விட தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் அதிக வாய்ப்புகள் அவருக்கு குவிந்து வருகிறது. 

varalakshmi sarathkumar

இந்நிலையில் நடிகை வரலட்சுமி சரத்குமார், சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் ஹீரோ மற்றும் இயக்குனர் கூட என்னை அட்ஜஸ்ட் பண்ண சொன்னார்கள். ஆனால் அதுபோன்ற வாய்ப்புகளோ வேண்டாம் என்று மறுத்துவிட்டேன். எப்போதும் மனதில் எந்த ஒரு குற்ற உணர்வும் இல்லாமல் இருக்கவேண்டும். அப்போதுதான் இரவில் நிம்மதியாக தூங்கமுடியும். 

நான் எப்போதும் இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபட மாட்டேன் என்று கூறினார். முன்னணி நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமிக்கே அட்ஜஸ்மென்ட் பிரச்சனை நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக பல நடிகைகள் இதுபோன்ற அட்ஜஸ்மென்ட் பிரச்சனையை வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Share this story