ரஜினி, அமிதாப் நிகராக கோடிகளில் சம்பளம் வாங்கினேன் - நடிகை விஜயசாந்தி நெகிழ்ச்சி !

vijayashanthi

 ரஜினி மற்றும் அமிதாப்பிற்கு இணையாக சம்பளம் வாங்கினேன் என்று நடிகை விஜயசாந்தி தெரிவித்துள்ளார். 

தென்னிந்தியாவில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியவர் நடிகை விஜயசாந்தி. தமிழ், தெலுங்கு என இந்தியாவின் பலமொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் ‘கல்லுக்குள் ஈரம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பிறகு மன்னன், ராஜாங்கம் உள்ளிட்ட சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். 

vijayashanthi

தென்னிந்தியாவில் லேடி சூப்பராக விளங்கிய அவரின் நடிப்பு இன்றைக்கும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் தனது பழைய நினைவுகளை அவர் ரசிகர்களுக்கு பகிர்ந்துள்ளார். அதில் நான் பல மொழிகளில் சுமார் 180-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்னேன். நான் முதல்முதலில் நடித்து படத்திற்கு பேசப்பட்ட சம்பளம் 5000 ரூபாய். ஆனால் கொடுத்தது என்னவோ 3 ஆயிரம் ரூபாய்தான்.

vijayashanthi

பின்னர் படிபடயாக சினிமாவில் உயர்ந்து கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகையாக மாறினேன். இந்திய சினிமாவில் அந்த காலத்தில் அதிக சம்பளம் வாங்கிய ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் ஆகியோருக்கு இணையாக நானும் கோடிகளில் சம்பளம் வாங்கினேன். இது எனக்கு மிகவும் பெருமையான விஷயம். ரஜினிக்கு சமமாக நான் சம்பளம் வாங்கினேன். விமான விபத்து, ஆற்றில் அடித்து செல்லப்பட்டது, தீயில் மாட்டியது என பல முறை செத்து பிழைத்திருக்கிறேன் என்று தனது நினைவலைகளை பகிர்ந்துள்ளார். 

 

 

Share this story