நடிகை விஜி சந்திரசேகர் மகளுக்கு திருமணம்

நடிகை விஜி சந்திரசேகர் மகளுக்கு திருமணம்

நடிகர் ரஜினிகாந்தின் தில்லு முல்லு படத்தில் தங்கையாக நடித்து சினிமாவில் அறிமுகமான விஜி சந்திரசேகர் இந்த பொங்கலுக்கு தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படத்தில் கடைசியாக நடித்துள்ளார். நடிகை சரிதாவின் தங்கையான விஜி சந்திரசேகர் பல படங்களில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இந்நிலையில், அவரது மூத்த மகள் சுரக்‌ஷாவின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்தில் விஜி சந்திரசேகர் நீதிபதியாக நடித்திருப்பார். விஜி சந்திரசேகர் மகள் திருமணத்தில் நடிகர் சூர்யா கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், நடிகர் சமுத்திரகனி உள்ளிட்ட பல பிரபலங்கள் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

நடிகை விஜி சந்திரசேகர் மகளுக்கு திருமணம்

அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவுக்காக சென்ற நடிகர் தனுஷ் சென்னையில் நடைபெற்ற விஜி சந்திரசேகர் மகள் திருமண விழாவில் கலந்து கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
 

Share this story