சட்டை பட்டனை கழற்றி…….. போஸ் கொடுத்த சேரன் பட நடிகை!

தமிழை பூர்வீகமாக கொண்ட விமலா ராமன், படித்தது வளர்ந்தது எல்லாமே ஆஸ்திரேலியா. மாடலிங் துறை மூலமாக சினிமாவில் நுழைந்த இவர், தமிழில் அறிமுகமானது 2004 ஆம் ஆண்டு கே. பாலசந்தர் இயக்கத்தில் வெளியான பொய் திரைப்படத்தில் தான். அடுத்ததாக சுரேஷ் கோபியுடன் நடித்து ‘டைம்’ எனும் மலையாள படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து ஜெயராமுடன் ‘சூர்யன்’, மம்மூட்டியுடன் ‘நஸ்ரானி’ எனும் படத்திலும், மோகன்லாலுடன் ‘காலேஜ் குமரன்’ எனும் படத்திலும் நடித்தார்.
தமிழில் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது இயக்குநர் சேரனுடன் இணைந்து நடித்த ‘ராமன் தேடிய சீதை’ திரைப்படம். தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் படங்கள் நடித்த இவர் ஆங்கிலத்திலும் ‘டேம் 999’ எனும் படத்தில் நடித்தார். இந்த நிலையில் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் விமலா ராமன் தனது பக்கத்தில் சட்டை பட்டனை கழற்றி காந்த பார்வை வீசும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 30 வயது மாதிரியே தெரியவில்லை டீன் ஏஜ் பெண் மாதிரி இருப்பதாக கமெண்டடித்து வருகின்றனர்.