பிரபல நடிகை யாஷிகாவிற்கு பிடிவாரண்ட்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

yashika anand

கார் விபத்து வழக்கில் ஆஜராகாத நடிகை யாஷிகாவிற்கு செங்கல்பட்டு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. 

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை யாஷிகா. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான அவர், ‘துருவங்கள் 16’ படத்தின் மூலம் நடிகையாக தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு  ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘நோட்டா’,  ‘ஜாம்பி’ ஆகிய படங்களில்  நடித்துள்ளார். 

yashika anand

இதற்கிடையே கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை ஈசிஆர் சாலையில் தனது தோழிகளுடன் இரவு விருந்து முடித்துவிட்டு காரில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது மாமல்லபுரம் அருகே வந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் யாஷிகா, அதிர்ஷ்ட வசமாக சிகிச்சை பெற்று உயிர் தப்பிய நிலையில் அவரது தோழி வள்ளிச்செட்டி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இந்த விபத்து தொடர்பாக மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வந்தனர். இது தொடர்பான வழக்கு செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஆஜராகும்படி இரண்டும் முறை யாஷிகாவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அவர் ஆஜராகாத காரணத்தால் வரும் 25-ஆம் தேதி கண்டிப்பாக நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என்று கண்டிப்புடன் உத்தரவிட்டார். இல்லையென்றால் கைது செய்யும்படி பிடிவாரண்ட்டும் பிறப்பித்து உத்தரவிட்டார். 

 

Share this story