அழகை காட்டி மயக்கும் யாஷிகா.. வைரல் புகைப்படங்கள் !
கருப்பு நிற சேலைக்கட்டி நடிகை யாஷிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ‘துருவங்கள் 16’ படத்தின் நடிகையாக அறிமுகமான இவர், ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்திற்கு பிறகு டாப் கியரில் சென்றார்.

பின்னர் ‘நோட்டா’, ‘ஜாம்பி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். திரைப்படங்களில் படுபிசியாக நடிகையாக வலம் வந்த இவர், அடுத்தடுத்த வாய்ப்பு குவிந்து வந்தது. இதற்கிடையே விருந்து நிகழ்ச்சிக்கு ஒன்றிற்கு சென்றுவிட்டு திரும்பிய போது விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். அதன்பிறகு சில மாதங்கள் சிகிச்சை பெற்று வந்தார்.

இதையடுத்து புதிய உத்வேகத்துடன் தற்போது படங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளார். அதற்காக கிளாமரில் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் கருப்பு நிற சேலையில் சிக்கென்று இருக்கும் புகைப்படங்களை யாஷிகா வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.


