கிளாமரில் எல்லை மீறும் யாஷிகா.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

உச்சக்கட்ட கிளாமரில் இருக்கும் புகைப்படங்களை நடிகை யாஷிகா வெளியிட்டுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். ‘துருவங்கள் 16’ படத்தின் மூலம் நடிகையாக தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘நோட்டா’, ‘ஜாம்பி’ ஆகிய படங்களில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சில படங்களில் நடித்தபோதிலும் அவரின் ஈர்ப்பு ரசிகர்களிடையே அதிகம் உள்ளது.
இப்படி பிசியான நடிகையாக இருந்த யாஷிகா, கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஈசிஆர் சாலையில் சென்னை வந்துக் கொண்டிருந்த போது விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் யாஷிகாவின் உயிர் தோழி வள்ளி ஷெட்டி பவானி மரணமடைந்தார். பலத்த காயமடைந்த யாஷிகா சில மாதங்கள் சிகிச்சைக்கு பிறகு பூரண குணமடைந்தார். தற்போது பழைய நிலைமைக்கு மாறியுள்ள புதிய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
இந்நிலையில் ரசிகர்களுக்கு தொடர்ந்து கவர்ச்சி விருந்து கொடுத்து வருகிறார் நடிகை யாஷிகா. சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா, தொடர்ந்து கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே லைக்குகளை அள்ளி வருகிறது. அந்த வகையில் உச்சக்கட்ட கிளாமரில் இருக்கும் புகைப்படங்களை யாஷிகா வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.