வெளிநாடு சுற்றுலா சென்றுள்ள யாஷிகா.. உச்சக்கட்ட கிளாமர் புகைப்படங்கள் !

நடிகை யாஷிகா ஆனந்த் வெளிநாடு சென்றுள்ள புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் கிளாமர் நடிகைகளை மிஞ்சும் அளவிற்குப் உச்சக்கட்ட கிளாமரில் கலக்கி வருகிறார் நடிகை யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர், ‘துருவங்கள் 16’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘நோட்டா’, ‘ஜாம்பி’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
இதையடுத்து இளம் ஹீரோக்களுடன் ஜோடிப்போட்டு நடிக்க ஆரம்பித்த அவர், கடந்த 2021-ஆம் ஆண்டு விபத்து ஒன்றில் சிக்கி படுகாயமடைந்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சில மாத சிகிச்சைக்கு பிறகு வீட்டிற்கு திரும்பினார். பின்னர் ஓய்வெடுத்து வந்த அவர் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
தற்போது மீண்டும் சினிமாவில் வாய்ப்பு தேடி வரும் யாஷிகா, உச்சக்கட்ட கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வெளிநாடு சுற்றுலா சென்றுள்ள யாஷிகா, அங்கு உச்சக்கட்ட கிளாமரில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.