பாவாடை தாவணியில் கவர்ச்சிக் காட்டும் யாஷிகா... வைரலாகும் புகைப்படங்கள்
பாவாடை தாவணியில் இருக்கும் புகைப்படங்களை நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்டுள்ளார்.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியான ‘துருவங்கள் 16’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த், ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘நோட்டா’, ‘ஜாம்பி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்த யாஷிகா, பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர், கடந்த ஆண்டு ஜூலை மாதம் விருந்து நிகழ்ச்சி ஒன்றிற்காக புதுச்சேரி சென்றுவிட்டு சென்னை திரும்பியபோது விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் படுகாயமடைந்த அவர், தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து சில மாதங்கள் ஓய்வெடுத்து வந்தார்.

தற்போது பழைய பார்மிற்கு திரும்பியுள்ள யாஷிகா, திரைப்படங்களில் மீண்டும் பிசியாக நடித்து வருகிறார். அதேநேரம் முன்புபோல் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் பாவாடை தாவணியில் புகைப்படங்களை யாஷிகா வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

