ப்ரதர் படப்பிடிப்பு தளத்தில் நடனமாடிய நடிகைகள்

ப்ரதர் படப்பிடிப்பு தளத்தில் குதூகலம்.... நடிகைகள் உற்சாக நடனம்...

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் எம். ராஜேஷ் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் பிரதர். ஜெயம்ரவி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். அனைத்து தரப்பு ரசிகர்களும் கண்டு மகிழும் வகையில் கலகலப்பான குடும்பத் திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது. பிரதர் திரைப்படத்தில் பிரியங்கா மோகன் மட்டுமன்றி சரண்யா பொன்வண்ணன், நட்டி, பூமிகா, விடிவி கணேஷ், சீதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார்.


இந்நிலையில், ப்ரதர் ஷூட்டிங் ஸ்டாட்டில், படத்தின் நாயகிகள் நடனமாடும் காணொலி சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. பிரியங்கா மோகன், பூமிகா, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் இந்த வீடியோவில் நடனம் ஆடியுள்ளார். ப்ரதர் திரைப்படம் அடுத்த ஆண்டு குடியரசு தினத்தை ஒட்டி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Share this story