நடிகையின் ஓபன் டாக்..! திருமணத்துக்கு முன்பே கர்ப்பம்.!

‘நீல தாமரை’ என்கிற மலையாள படத்தின் மூலமாக திரையுலகுக்கு அறிமுகமானார் நடிகை அமலாபால். தமிழில் ‘சிந்து சமவெளி’ என்கிற படத்தின் மூலமாக அறிமுகமானார். அதன் பின்னர் ‘மைனா’, ‘தெய்வத்திருமகள்’, ‘வேட்டை’, ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’, ‘தலைவா’, ‘வேலையில்லா பட்டதாரி’, ‘பசங்க 2’, ‘அம்மா கணக்கு’, ‘ராட்சசன்’ போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் முதலில் இயக்குனர் ஏ.எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில வருடங்களிலேயே இந்த திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. தற்போது இவர் ஜகத் தேசாய் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ஜகத் தேசாய் உடன் காதல் ஏற்பட்டது எப்படி? திருமணத்திற்கு முன்பே கர்ப்பமடைந்தது என பல விஷயங்களை அமலாபால் பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது, “ஜகத் தேசாயை சந்தித்த ஒரு மாதத்திலேயே கர்ப்பம் அடைந்து விட்டேன். முதலில் கர்ப்பம் அடைந்த பிறகு தான் திருமணம் செய்து கொண்டோம்” எனக் கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், எங்கள் மகன் இலை எங்கள் வாழ்க்கையில் மிகுந்த மகிழ்ச்சியை கொண்டு வந்துள்ளான். அவனுக்காக எங்கள் ஈகோ அனைத்தையும் உடைத்து எறிந்து விட்டோம். இலையின் வருகைக்குப் பின்னர் எங்கள் இருவரிடையே இருந்த நெருக்கம் என்னும் அதிகமாகி இருக்கிறது. அதனால் தான் இந்த உறவை நான் புனிதமானது என்பது சொல்கிறேன். என் மகன் வந்த பிறகு தான் நான் எவ்வளவு பொறுமைசாலி என்பதை தெரிந்து கொண்டேன். எனக்கு பொறுமை என்பதே கிடையாது. இப்போதெல்லாம் என் அண்ணன் கூட என்னைப் பார்த்து நீ எப்படி இவ்வளவு பொறுமைசாலியாக மாறிவிட்டாய் என்று ஆச்சரியப்பட்டார். அந்த அளவிற்கு என் மகன் என்னை மாற்றி விட்டான்” என பேசியுள்ளார்.