அட்ராசிட்டி செய்யும் ராஷி கண்ணா.. கலக்கலான போட்டோஷூட்

Raashii Khanna

 நடிகை ராஷி கண்ணா அட்ராசிட்டி செய்யும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

Raashii Khanna

பாலிவுட் நடிகையான அறிமுகமானவர் நடிகை ராஷி கண்ணா. கடந்த 2013-ஆம் ஆண்டு இந்தியில் வெளியான ‘மெட்ராஸ் கபே’ படத்தின் மூலம் நடிகையான அறிமுகமானார். இந்தியில் வாய்ப்பு இல்லாததால் தெலுங்கில் சினிமாவிற்கு நுழைந்தார். அங்கு கொஞ்சம் வாய்ப்புகள் கிடைக்க அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வந்தார். 

Raashii Khanna

அதன்பிறகு தமிழில் நயன்தாரா நடிப்பில் வெளியான ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழில் முதல் படமே நல்ல ஓபனிங்கை தந்தது. அதன்பிறகு விஷாலுடன் அயோக்யா, ஜெயம் ரவியுடன் அடங்கமறு, விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன், ஆர்யாவுடன் அரண்மனை 3 என அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் கதாநாயகியாக நடித்தார். 

Raashii Khanna

இதற்கிடையே ரசிகர்களை கவரும் விதவிதமான கவர்ச்சி உடையில் போட்டோஷூட்டுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களின் லைக்குகளை குவிக்கும். இந்நிலையில் உச்சக்கட்ட கவர்ச்சியில் இருக்கும் புகைப்படங்களை ராஷி கண்ணா வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர். அதேநேரம் இவ்வளவு கவர்ச்சி தேவையா என நெட்டிசன் கொந்தளித்து வருகின்றனர். 

Raashii Khanna

 

Share this story