மறைந்த நடிகர் கோட்டா சீனிவாச ராவ் உடலுக்கு ஆந்திர முதல்வர் அஞ்சலி

kotta

தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்தியில் 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள கோட்டா சீனிவாச ராவ் (83), உடல்நலக்குறைவு காரணமாக நேற்று அதிகாலை 4.30 மணிக்கு திடீரென்று மரணம் அடைந்தார். தமிழில் 2003ல் விக்ரம் நடிப்பில் வெளியான ‘சாமி’ என்ற படத்தில், பெருமாள் பிச்சை என்ற வில்லன் கேரக்டரில் நடித்து பிரபலமானவர், கோட்டா சீனிவாச ராவ். தொடர்ந்து ‘குத்து’, ‘ஜோர்’, ‘ஏய்’, ‘திருப்பாச்சி’, ‘பரமசிவன்’, ‘சத்யம்’, ‘கோ’, ‘சாமி 2’, ‘காத்தாடி’ உள்பட பல படங்களில் நடித்தார்.
தமிழில் சாமி, திருப்பாச்சி, சகுனி உள்ளிட்ட படங்களில் கோட்டா சீனிவாசராவ் நடித்துள்ளார்.
2015இல் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது உள்பட பல்வேறு விருதுகளை கோட்டா சீனிவாசராவ் வென்றுள்ளார்
இவரது உடலுக்கு பல தெலுங்கு நடிகர்களும் அரசியல் தலைவர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஆந்திரா துணை முதலமைச்சரான பவன் கல்ய
நடிகர் பிரம்மானந்தம் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர் அப்ப்போது அவர்கள் மிகவும் கோட்டா ஸ்ரீனிவாசனைப் பற்றி உருக்கமாக பேசினார்கள்.
இந்நிலையில், மறைந்த நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவுக்கு, ஆந்திர பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது ,
"கோட்டா ஸ்ரீனிவாச ராவ் ஒரு சிறந்த நடிகர். அவருடைய இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது. கடந்த 4 தசாப்தங்களாக கன்னடம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் நடித்து   7 நந்தி விருதுகளை பெற்றுள்ள அவர், 5 ஆண்டுகள் எம்.எல்.ஏ.வாகவும் இருந்துள்ளார்.அவர் மிகப்பெரிய அளவில் மக்கள் பணியை ஆற்றியுள்ளார்"என்றார் 
 

Share this story