பேசப்படும் படமாக மாறியுள்ளது ‘போர்த்தொழில்‘.. படக்குழுவினருக்கு நடிகை ராதிகா பாராட்டு !
![por thozhil](https://ttncinema.com/static/c1e/client/88252/uploaded/754b0552c0a108e75610211fd1f2901d.jpg)
‘போர்த்தொழில்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருவதாக நடிகை ராதிகா பாராட்டு தெரிவித்துள்ளார்.
அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘போர் தொழில்’. க்ரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை விக்னேஷ் ராஜா இயக்கவுள்ளார். இந்த படத்தில் நிகிலா விமல் கதாநாயகியாக நடித்துள்ளார்.
அப்பலாஸ் என்டர்டெயின்மென்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் கடந்த ஜூன் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் வெளியாகி மூன்று வாரங்களை கடந்தபோதிலும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த படம் குறித்து நடிகை ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை ராதிகா கருத்து தெரிவித்துள்ளார். அதில், ஒரு நாள் என் கணவர் வீட்டுக்கு வந்து இயக்குனர் விக்னேஷ் ராஜா, நிச்சயம் மிகப்பரிய ஆளாக வருவார் என்று கூறினார். போர் தொழில் திரைப்படம் மூன்று வாரங்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் நேற்று சத்யம் திரையரங்கில் படம் பார்த்தேன். கொட்டும் மழையிலும் ரசிகர்கள் கூட்டத்தால் திரையரங்கம் நிரப்பி வழிந்தது. கணவர் சரத்குமார், அசோக் செல்வன், இயக்குனர் விக்னேஷ் ராஜா உள்ளிட்டோருக்கு வாழ்த்துக்கள். இந்த படத்தின் கதைக்கரு மக்களுக்கு பிடித்திருப்பதால் அவர்கள் விரும்பி படம் பார்க்கின்றனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
My husband came home one day and said watch out for #vigneshraja dir, he is going to be a path breaker.watched the movie in #sathyam theatre in its 3rd wk on a Monday, with heavy rains in the city. But nothing fettered the packed audience to see and appreciate a well written and… pic.twitter.com/MlZHOd74MX
— Radikaa Sarathkumar (@realradikaa) June 20, 2023