‘பட்டத்து அரசன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு; களத்தில் இறங்கிய அதர்வா.

photo

தமிழ் சினிமாவில் தனக்கான அங்கீகாரத்தை தேடி தொடர்ந்து வளர்ந்து வரும் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் அதர்வா. அந்த வகையில் அதர்வா கைவசம்  'அட்ரஸ்', 'ஒத்தைக்கு ஒத்த' படங்கள் உள்ளன. தொடர்ந்து படங்களின் அறிவிப்புகள்,ஃபஸ்ட் லுக் போஸ்டர் என  அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் ‘பட்டத்து அரசன்’ படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

photo

இந்த படத்தை இயக்குநர் சற்குணம் இயக்க, லைக்கா நிறுவனம் தயாரிக்கின்றது. படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக கன்னட நடிகை ஆஷிகா ரங்கநாத்தை நடிக்க இருக்கிறார்.அது மட்டும்மல்லாமல் அதர்வாவுடன் இணைந்து ராஜ்கிரணும் ஒரு  முக்கியமான  கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதற்கான போஸ்டர் தான் தற்பொழுது வெளியாகியுள்ளது, கிராமத்து கதைகளத்தில் உருவாகும் இந்த படத்தின் மற்ற நடிகர் நடிகைகள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

photo

‘வாகை சூடவா’ படத்தில் தனக்கான தனி முத்திரையை பதித்து சிறந்த தமிழ் படத்திற்காக தேசிய விருது பெற்ற இயக்குநர் சற்குணம் ,ஏற்கனவே அதர்வா நடிப்பில் ‘சண்டிவீரன்’ படத்தை இயக்குயுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

photo

Share this story