‘பட்டத்து அரசன் ‘ படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் சென்சார் சான்றிதழ் தகவல்- வெளியானது மோஷன் போஸ்டர்.

அட்ரஸ், ஒத்தைக்கு ஒத்த படங்களை கைவசம் வைத்துள்ள நடிகர் அதர்வா தற்பொழுது ‘பட்டத்து அரசன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த படத்தை இயக்குநர் சற்குணம் இயக்க, லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.இந்தபடத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக கன்னட நடிகை ஆஷிகா ரங்கநாத்தை நடித்துள்ளார்.அது மட்டும்மல்லாமல் அதர்வாவுடன் இணைந்து ராஜ்கிரணும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதற்கான போஸ்டர் கூட சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கிராமத்து கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின், சென்சார் சான்றிதழ் மற்றும் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதற்காக மோஷன் போஸ்டர் ஒன்றும் வெளியாகுயுள்ளது.
அதாவது படத்திற்கு U சான்றிதழ் கிடைத்துள்ளது, படம் இன்மாதம் 25-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த அதிகாரப்பூர்வ தகவலை லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது.