கூடுதல் காட்சிகள் இணைக்கப்பட்டு ஓடிடி தளத்தில் வெளியாகும் ‘விடுதலை பாகம் 1’.

photo

நேரம் கருதி திரையரங்கில் வெளியிடாமல் போன சில காட்சிகளை இணைத்து ஓடிடி தளத்தில் வெளியிட ’விடுதலை’ படக்குழு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

photo

வெற்றிமாறன், சூரி, விஜய்சேதுபதி, கூட்டணியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘விடுதலை’. ஜெயமோகனின் ‘துணைவன்’ நாவலை மையப்படுத்தி தயாரான இந்த படத்தில் வச்சாத்தி சம்பவம் , அரியலூர் குண்டு வெடிப்பு சம்பவம் என பல உண்மை சம்பவங்கள் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டன. படத்திற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் பாசிட்டிவான விமர்சனத்தை கொடுத்த நிலையில், இது வீரப்பனின் கதை, சோளகர் தொட்டி புத்தகத்தில் கதை என குற்றசாட்டுகளையும் முன்வைத்தனர்.

photo

இந்த நிலையில் திரையில் கொண்டாடப்பட்ட இந்த படம் விரைவில் ஒடிடியில் வெளியாகவுள்ளது. இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால், படத்தின் நேரம் கருதி திரையரங்கில் நீக்கப்பட்ட காட்சிகள் இதில் இணைக்கப்படுகிறது. அதாவது கிட்டத்தட்ட 20 நிமிட காட்சிகள் இணைக்கப்பட உள்ளது. இந்த தகவலால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Share this story