"அதர்வா நடிப்பில் ருத்ர தாண்டவம் ஆடியிருக்கிறார்"-ரசிகர்களின் ஆதரவு பெற்ற" டி என் ஏ" .

காலம் சென்ற நடிகர் முரளியின் மகன் அதர்வாவின் நடிப்பிலும் ,"ஒரு நாள் கூத்து" படத்தின் இயக்குனர் நெல்சன் வெங்கடேசனின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் டி என் ஏ .இப்படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டீவ்வான விமர்சனத்தை பெற்றுள்ளது
இப்படத்தில் பார்த்திபன் ஒளிப்பதிவு இயல்பாக இருக்கிறது. சத்யபிரகாஷ், ஸ்ரீ காந்த் ஹரிஹரன், பிரவீன் சைவி, சஹி சிவா, அனல் ஆகாஷ் ஆகிய 5 இசை அமைப்பாளர்களின் பாடல்களில் தனித்துவம் தெரிகிறது. ஜிப்ரான் பின்னணி இசை, கதையின் நகர்வுக்கு பலம் சேர்த்துள்ளது.
போதைக்கு அடிமையாகி, வாழ்க்கையில் பாதை மாறி பயணிக்கும் அதர்வா முரளிக்கு இது திருப்புமுனை படம். மனைவியிடம் நேசம், குழந்தையிடம் பாசம், காணாமல் போனதை தேடுவதில் ஆவேசம் என்று, நடிப்பில் ருத்ர தாண்டவம் ஆடியிருக்கிறார். சண்டைக் காட்சிகளில் நன்றாக ‘அடி’த்துள்ளார். சரிதா, சுஹாசினி கலந்த கலவையாக, வித்தியாசமான மனநிலை கொண்ட நடிப்பில் நிமிஷா சஜயன் ஸ்கோர் செய்துள்ளார். குழந்தை மாறிய பிறகான அவரது நடிப்பு, பெண்களுக்கு கண்ணீரை வரவழைக்கும். திவ்யா அன்ட் ஆனந்த் என்பதே DNA. நேர்மையான போலீஸ் பாலாஜி சக்திவேல், அதர்வா முரளியின் அப்பா சேத்தன், நண்பர் ரமேஷ் திலக், டாக்டர் ரித்திகா, விஜி சந்திரசேகர், போஸ் வெங்கட், கருணாகரன், சுப்பிரமணியம் சிவா ஆகியோரும் தேர்ந்த நடிப்பை வழங்கியுள்ளனர். ‘கயல்’ பாட்டி சாந்தகுமாரியின் நடிப்பும், வசனமும் வீரியமானவை.