ஐந்து இசையமைப்பாளர்கள் இசையமைத்த அதர்வாவின் அடுத்த படம் .

அதர்வா நடித்த டிஎன்ஏ படத்தின் 5 பாடல்களும் 5 வெவ்வேறு இசையமைப்பாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது .
பாணா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் அதர்வா முரளி. பரதேசி, இமைக்கா நொடிகள், சண்டி வீரன், ஈட்டி போன்ற படங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தி கோலிவுட்டில் தனக்கென தனியிடம் பிடித்தவர் அவர்
அடுத்து அதர்வா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் டிஎன்ஏ. இப்படத்தில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார்.
டைரக்டர் நெல்சன் வெங்கடேசன் இதற்கு முன் ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், ஃபர்ஹானா போன்ற திரைப்படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2016-ம் ஆண்டு தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா பெத்துராஜ் நடிப்பில் வெளியான 'ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் வெங்கடேசன்
இந்நிலையில், டிஎன்ஏ படம் வெளியாகும் தேதியை போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். அதன்படி, டிஎன்ஏ திரைப்படம் வரும் ஜூன் 20ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் .இதனால் அதர்வாவின் ரசிகர்கள் இப்படத்தை ஆவலுடன் எதிர் பார்த்துள்ளனர் .இப்படத்தின் டீசர் யூடியூபில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளது