"அதர்வா மிஸ் பண்ண கதை அந்த வெற்றி படம்" -மாரி செல்வராஜ் வருத்தம்

பரியேறும் பெருமாள் படத்தில் நடிக்க முதலில் தான் அதர்வாவை அணுகியதாகவும் ,ஆனால் அவர் அப்போது நடிக்க இயலாமல் போனது தனக்கு வருத்தம் என்று இயக்குனர் மாரி செல்வராஜ் கூறினார்
நடிகர் அதர்வா பாணா காத்தாடி மூலம் அறிமுகமாகி பல வெற்றி படங்களில் நடித்து வருகிறார் .இவர் மறைந்த நடிகர் முரளியின் மகன் ஆவார் .முரளி ஒரு தலை காதலுக்கு முக்கியத்துவம் உள்ள இதயம் வெற்றி படத்தின் மூலம் ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தவர்
அதர்வா, நிமிஷா சஜயன் உள்ளிட்டோர் நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ‘டிஎன்ஏ’. இந்த படம் வருகிற ஜூன் 20-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் மாரி செல்வராஜ் கலந்து கொண்டார்.
இந்த விழாவில் பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ் ‘பாணா காத்தாடி’ வெளியான உடனேயே பரியேறும் பெருமாள் கதையை எழுதும் பொழுது தான் அதர்வாவை மனதில் வைத்து தான் எழுதியதாகவும் ,முரளி சாரின் மகன் நம்மைப் போல தான் இருப்பார், இந்த கதைக்கு சரியாக இருப்பார் என நான் நினைத்தேன்.
ஆனால் அப்போது அவர் பிசியாக இருந்து பரியேறும் பெருமாள் படத்தில் நடிக்க மறுத்தது தனக்கு ரொம்ப வருத்தத்தை கொடுத்ததாக கூறினார் .