அதர்வாவின் ஆக்ஷன் அதிரடியில் ‘டிஎன்ஏ’.

photo

கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர் அதர்வா நடிப்பில் தயாராகவுள்ள படத்தின் டைட்டிலை படத்தயாரிப்பு நிறுவனமான வெளியிட்டுள்ளனர்.

photo

நடிகர் அதர்வா மற்றும் மலையாள நடிகையான நிமிஷா சஜயன் இணைந்து நடிக்க உள்ள படத்தை ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், ஃபர்ஹானா உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்க உள்ளார். படத்தை டாடா பட தயாரிப்பாளரான  அம்பேத் குமார் இயக்குகிறார். படத்திற்கு ‘டிஎன்ஏ’ பெயரிட்டுள்ளனர்.  க்ரைம் த்ரில்லர் மற்றும் அதிரடி ஆக்ஷன் நிறைந்த படமாக உருவாகும் என கூறப்படுகிறது. படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது மேலும் படத்தின் மற்ற நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பு பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ளது.

Share this story