ஆதியுடன் இணைந்த பிரபல நடிகை... ‘சப்தம்’ புதிய அப்டேட் !

AadhiPinisetty

ஆதியின் ‘சப்தம்’ படத்தில் பிரபல நடிகை இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘ஈரம்’ படத்தின் வெற்றிக்கு பிறகு அறிவழகன் இயக்கத்தில் நடிகர் ஆதி, இரண்டாவது முறையாக நடிக்கும் திரைப்படம் ‘சப்தம்’. வித்தியாசமான கதைக்களத்தில் ‘ஈரம்’ பட பாணிலேயே இப்படம் உருவாகிறது. இந்த படத்தில் லஷ்மி லட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் ரெடின் கிங்ஸ்லி நடித்து வருகிறார்.    

AadhiPinisetty

இந்தப் படத்தை 7ஜி ஃபிலிம்ஸ் மற்றும் அறிவழகனின் ஆல்பா பிரேம் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.  ‘ஈரம்’ படத்திற்கு சிறந்த பின்னணி இசையை கொடுத்த தமன் இந்த படத்திற்கும் இசையமைத்து வருகிறார். கடந்த ஆண்டு டிசம்பர் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

AadhiPinisetty

சமீபத்தில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில் விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. முதற்கட்ட படப்பிடிப்பில் ஆதியின் முக்கிய காட்சிகள் மட்டும் படமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் நடிகை லைலா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளார். சமீபத்தில் ‘சர்தார்‘ படத்தில் சிறந்த நடிப்பை நடிகை லைலா வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story