‘மார்க் ஆண்டனி’ பட வெற்றி - சூப்பர் ஸ்டாரை சந்தித்து வாழ்த்து பெற்றார் ‘ஆதிக் ரவிசந்திரன்’.

photo

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை  பெற்று வசூலில் படையை கிளப்பி வரும் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் அமோக வெற்றியை தொடர்ந்து படத்தின் இயக்குநர் ‘ஆதிக் ரவிசந்திரன்’ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

photo

நடிகர் விஷால் மற்றும் எஸ்.ஜெ சூர்யா இணைந்து நடித்து,  மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள மார்க் ஆண்டனி படம்  தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உலகம் முழுவதும் கடந்த 15ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்வித்தியாசமான கதைகளம் கொண்ட இந்த படத்தில் ரித்து வர்மா, தெலுங்கு நடிகர் சுனில், ஓய்.ஜி.மகேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, அபிநயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

photoபடம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் தூள் கிளப்பி வரும் நிலையில் படத்தின் இயக்குநரான ஆதிக் ரவிசந்திரன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Share this story