இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே! – செல்வராகவன் படத்தில் அதிதி ஷங்கரா?

photo

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநர்களுள் முக்கியமானவர் செல்வராகவன்.  தனக்கென தனி பாணியை கொண்டு சூப்பர்ஹிட் படங்களை இயக்குவது மட்டுமல்லமல் நடிகராவும் அசத்தி வருகிறார். இந்த நிலையில் செல்வராகவனின் தரமான படைப்பாக கடந்த 2004ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘7ஜி ரெயின்போ காலனி’. நடிகர் ரவிகிருஷ்ணா, சோனியா அகர்வால் இணைந்து நடித்திருந்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை அவர் இயக்க போவதாக தகவல் வெளியானது.

photo

இரண்டாவது பாகத்திலும் ரவி கிருஷ்ணாதான் ஹீரோவாக நடிக்க போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது அதாவது படத்தில் நடிக்க இயக்குநர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. அதிதி தற்போது ஆகாஷ் முரளியுடன் இணையும் அவரது அடுத்த படத்திற்காக பேர்ச்சிக்கல் நாட்டிற்கு சென்றுள்ளார். 7ஜி ரெயின்போ காலனி படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி துவங்கி இந்த ஆண்டு இறுதிக்குள் படத்தை எடுத்து முடித்து அடுத்த ஆண்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளார்கலாம்.

 

Share this story