‘மனசார உன்னோட ஃபேனா ஆனேன் நான்………’- அதிதீ சங்கரின் அழகிய புகைப்படங்கள்.

photo

நடிகை அதிதீ சங்கர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.

photo

photo

பிரம்மாண்ட் இயக்குநர் சங்கரின் மகளான் அதிதீ, எம்.பி.பி.எஸ் படித்து இருக்கிறார். இருந்தாலும் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் சினிமாவில் நுழைந்தார்இவரது முதல் படமே இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்த, ‘விருமன்’ திரைப்படம்.  அந்த படத்தில்  தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியது மட்டுமலாமல். ‘கஞ்சா பூ கண்ணால’ பாடலுக்கு துள்ளலான ஸ்டெப் போட்டு, அனைவரையும் ஆடவைத்தார்.

photo

photo

அந்த சமயத்தில் இந்த பாடலுக்கு அதே ஸ்டெப் போட்டு சமூகவலைதலத்தில் ரீல் செய்து பலரும் வெளியிட்டனர். இதனைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மாவீரன்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். என்னதான் படங்களில் பிசியாக இருந்தாலும் அதிதீ போட்டோசூட்டில் அதிக ஆர்வமாக உள்ளார். தொடர்ந்து பல புகைப்படங்களை எடுத்து தனது சமூகவலைதளபக்கத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். சமீபத்தில் கூட அவர் சேலையில் வெளியிட்ட புகைப்படங்கள்  பல இளவட்டங்களின் இதயங்களை கொள்ளைகொண்டது. அந்த வரிசையில் தற்போது பிங்க் நிற கோட்சூட் அணிந்து காந்த பார்வையில் செம ஸ்டைலிஷ்ஷான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை ரசிகர் வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

Share this story